ஜாகிர் முசாவின் கொலைக்கு பழி வாங்க பயங்கரவாதிகள் சதி: பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை

புல்வாமா தாக்குதலைப் போன்று மற்றுமொறு தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் ஒரு பிரிவான அன்சார் காஸ்வத் அமைப்பின் தளபதி ஜாகிர் முசாவை கடந்த மாதம் இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது. இதற்கு பழி வாங்கும் விதமாக அவந்திபுரா நெடுஞ்சாலைப் பகுதியில் இந்திய ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இந்த தகவலை அமெரிக்காவிடமும் பாகிஸ்தான் பகிர்ந்து கொண்டுள்ளது.

பாகிஸ்தான் அரசின் இந்த எச்சரிக்கையை அடுத்து அப்பகுதியில் இந்திய ராணுவம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. தீவிரவாதிகளின் நடமாட்டம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 40க்கும் அதிகமான துணை ராணுவப் படையினர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version