கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, தான் அரசியலில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி அண்மையில் கவிழ்ந்தது. இதையடுத்து முதலமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். பின்னர் எடியூராப்பா தலைமையில் பாஜக அரசு ஆட்சி பொறுப்பேற்றது.
இந்தநிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, அரசியலில் ஓய்வு பெற இருப்பதாகவும், ஆட்சியில் இருக்கும் வரை நிறைவான பணிகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார். அரசியலுக்கு தற்செயலாக வந்ததாக கூறிய அவர், 2 முறை முதல்வராக பணிபுரிந்ததில் பெருமைப்படுவதாக குறிப்பிட்டார்.
கர்நாடகாவில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழல் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், மக்கள் மனதில் தனக்கு எப்போதும் தனி இடம் உண்டு என்றும் குமாரசாமி தெரிவித்தார்.