கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டு முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்திற்காக பரப்பப்படுவதாக அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கொடநாடு விவகாரம் தொடர்பாக சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் சந்தித்து மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் மு.க.ஸ்டாலின் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.
Discussion about this post