அதிருப்தி எம்எல்ஏக்களை சந்திக்க மும்பை சென்ற அமைச்சர் சிவகுமார் – போலீசார் தடுத்ததால் பரபரப்பு

மும்பை நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்களை சந்திக்க சென்ற காங்கிரஸ் அமைச்சர் சிவகுமாருக்கு காவல்துறையினர் அனுமதிக்க மறுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முதலமைச்சர் குமாரசாமி மற்றும் அமைச்சர் சிவகுமாரால் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணியைச் சேர்ந்த 14 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளதால் அவர்களை சமாதானம் செய்ய ஆளும் தரப்பு முயன்று வருகிறது.

இந்நிலையில் மும்பை நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்களை சந்தித்து சமாதானப்படுத்த, காங்கிரஸ் அமைச்சர் சிவகுமார் தலைமையிலான குழுவினர் மும்பை சென்றனர். இத்தகவலை அறிந்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள், முதலமைச்சர் குமாரசாமி மற்றும் அமைச்சர் சிவகுமாரால் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மகாராஷ்டிர காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் எம்.எல்.ஏக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்த அமைச்சர் சிவக்குமாரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Exit mobile version