மத்திய இடைக்கால பட்ஜெட் குறித்து கமல் டுவிட்டர் பதிவு

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டில், தமிழக மக்களை பாதிக்கும் விஷயங்களுக்கான தீர்வாக எந்த ஒரு அறிவிப்பும் இல்லை என்று மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடுத்தர வர்கத்தினர் மற்றும் விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக இருந்தாலும், அதை நாளொன்றிற்கு கணக்கிட்டுப் பார்த்தால், சொற்பமாகவே உள்ளதாக டுவிட்டர் கருத்து பதிவிட்டுள்ளார். இந்த இடைக்கால பட்ஜெட்டில் உள்ள ஓட்டைகளை, பொருளாதார நிபுணர்கள் சுலபமாக கோடிட்டு காட்டிவிடுவார்கள் என்று கூறியுள்ள கமல்ஹாசன், பட்ஜெட்டின் ஒருசில விஷயங்களை பார்த்தால், ஓட்டுக்கு நேரடியாக பணம் கொடுக்காமல், அதை பட்ஜெட்டில் கொண்டுவந்துள்ளது போல் தெரிவதாக சுட்டிக்காட்டியுள்ளார். மொத்தத்தில், மத்திய அரசு அவர்களுக்கென்றே உருவாக்கிய பட்ஜெட் போல் உள்ளது என்றும், தமிழக மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வாக எந்த ஒரு அறிவிப்பும் அதில் இல்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

Exit mobile version