கஜா புயல் சீரமைப்பு பணிக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பல்வேறு தரப்பினரும் நிவாரண உதவிகளை வழங்கினர். தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்பில், துணைவேந்தர் முருகேசன் ஒரு கோடியே 57 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
இதனை தொடர்ந்து Broiler co-ordination கமிட்டி தலைவர் லட்சுமணன் ஒரு கோடியே ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையையும், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மேலாண்மை இயக்குனர் ராமமூர்த்தி 56 லட்ச ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரிடம் வழங்கினர்.
ஸ்ரீ ஐயப்பா சேவா சங்கத்தின் தலைவர் பாஸ்கர் 10 லட்ச ரூபாய்க்கான காசோலையையும், நாமக்கல் முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினர்.
இதேபோல், தமிழ்நாடு வீட்டுவசதி கழகத்தின் சார்பில், அதன் தலைவர் மஞ்சுநாதா ஐபிஎஸ் 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும், கே.பி.ஆர். மில் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ராமசாமி 25 லட்ச ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் பழனிசாமியிடம் வழங்கினர்.
ரூட்ஸ் குழும நிறுவனத்தின் சார்பாக 25 லட்ச ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.
Discussion about this post