உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகல்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து காயம் காரணமாக இந்திய வீரர் ஷிகர் தவான் விலகியுள்ளார்.

இந்திய ஆட்டக்காரர் ஷிகர் தவான், இருதினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் பங்கேற்று ஆடியபோது அவரது கையில் காயம் ஏற்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் 3 வாரங்களுக்கு அவர் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து உலக கோப்பை தொடரில் இருந்து ஷிகர் தவான் தற்போது விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் அல்லது ஷ்ரேயாஸ் ஐயர் உலகக் கோப்பை தொடரில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version