ஹாக்கியில், சிறந்த தரநிலையை எட்டியது இந்திய ஆண்கள் அணி

இந்திய ஆண்கள் ஹாக்கி அணியினர் சர்வதேச தரவரிசையில் 4 ஆம் இடம் பிடித்ததுடன் தனது சிறந்த நிலையை எட்டியுள்ளது.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு இந்தாண்டுக்கான ஹாக்கி அணிகளின் தரவரிசையை வெளியிட்டுள்ளது. தற்போது சர்வதேச அணிகள் பங்கு பெறும் ஹாக்கி ப்ரோ லீக் போட்டிகள் நடந்து வருகிறது. கடந்த ஓராண்டாக அணிகளின் செயல்பாடுகளை வைத்து இந்த தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தற்போது ஹாக்கி ப்ரோ லீக் போட்டியில், இந்திய அணி, நடப்பு சாம்பியனான பெல்ஜியம், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பலம் வாய்ந்த அணிகளை அபாரமாக வீழ்த்தி லீக் போட்டிகளில் முன்னிலை வகிக்கிறது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாக 5-வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இது இந்திய அணியின் சிறந்த தரநிலையாக உள்ளது.

முதலிடத்தில் பெல்ஜியம் அணியும், 2-வது மற்றும் 3-வது இடத்தில் ஆஸ்திரேலியா, நெதர்லாந்து அணிகளும் தங்களது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளன.

Exit mobile version