உலக கோப்பை ஹாக்கி – இந்திய அணி 5-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது

உலக கோப்பை ஹாக்கி போட்டியில் முதல் ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.

உலக கோப்பை ஹாக்கி தொடர் இந்தியாவின் ஒடிசாவில் உள்ள புவனேஸ்வரில் நேற்று கோலகலமாக தொடங்கியது. சி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை இன்று எதிர் கொண்டது. போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி அடுத்தடுத்து கோல்களை அடித்தது.

இறுதி வரை போராடிய தென் ஆப்பிரிக்க அணியால் ஒரு கோல் கூட அடிக்காத நிலையில், இந்தியா 5க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இரண்டு கோல்கள் அடித்த சிம்ரன்ஜித் சிங் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்தியா தனது அடுத்த லீக் போட்டியில் பெல்ஜியத்தை எதிர்க்கொள்கிறது.

Exit mobile version