உலக கோப்பை ஹாக்கி: பெல்ஜியம் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை

உலக கோப்பை ஹாக்கி தொடரில் பெல்ஜியம் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

உலக கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்றது. இறுதி போட்டியில், பெல்ஜியம் அணி, தரவரிசையில் நான்காவது இடத்திலுள்ள நெதர்லாந்தை எதிர்கொண்டது. இரு அணி வீரர்களும் சம பலத்தை வெளிப்படுத்தினர்.

இதனால், ஆட்ட நேர முடிவில் ஒரு கோல் கூட அடிக்கப்படவில்லை. பின், வெற்றியாளரை தீர்மானிக்க ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் துடிப்பாக விளையாடிய பெல்ஜியம் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம், பெல்ஜியம் அணி முதல் முறையாக கோப்பை வெற்றி பெற்றது.

Exit mobile version