ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி – பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் 5-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆண்களுக்கான ஹாக்கி போட்டி நடைபெற்றது. இந்திய அணி தனது பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது.

ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பாகிஸ்தான் அணியை சேர்ந்த இர்பான் கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, 24-வது நிமிடத்தில் பதில் கோல் அடித்தது.

அதற்கு பின்னர், இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி மேலும் இரண்டு கோல்கள் அடித்தனர். இதனால், ஆட்டம் இறுதியில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Exit mobile version