ரயில்வே அணிகளுக்கிடையேயான தேசிய அளவிலான ஹாக்கி போட்டி:சாம்பியன் பட்டம் வென்ற தெற்கு மத்திய இரயில்வே அணி

சென்னையில் நடைபெற்ற ரயில்வே அணிகளுக்கிடையேயான தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் தெற்கு மத்திய ரயில்வே அணி சாம்பியன் பட்டம் வென்றது.சென்னை ஹாக்கி சங்கத்துடன் இணைந்து ஐசிஎப் விளையாட்டு சங்கம் நடத்திய இறுதி போட்டியில் தெற்கு மத்திய ரயில்வே அணியும் ஐசிஎப் அணியும் மோதின.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் தெற்கு மத்திய ரயில்வே அணி 4-2 என்ற கோல் கணக்கில், ஐசிஎப் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் வீரரும் அர்ஜீனா விருது பெற்றவருமான பாஸ்கர் மற்றும் ஐசிஎப் பொது மேலாளார் மணி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

Exit mobile version