பெண்கள் உலக கோப்பை ஹாக்கி போட்டி – காலிறுதியில் இந்தியா, அயர்லாந்து அணிகள் இன்று மோதல்

பெண்கள்  உலக க்கோப்பை ஹாக்கி போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.   இன்று நடைபெறும் காலிறுதிப்  போட்டியில், இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள்  மோதுகின்றன. லீக்  போட்டியின் போது அயர்லாந்து அணி இந்தியாவை  1க்கு பூஜ்யம்  என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதற்கு, பதிலடி கொடுக்கும் வகையில் இன்றைய  ஆட்டம்  இருக்கும் என்பதால், இன்றைய போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  1978ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய பெண்கள் ஹாக்கி அணி காலிறுதிக்கு தகுதி பெற்று இருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version