மழையால் நிறுத்தப்பட்ட இந்தியா-நியூசி. போட்டி இன்று மீண்டும் தொடக்கம்

மழையால் நிறுத்தப்பட்ட இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது அரையிறுதி ஆட்டம் இன்று தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதிய உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டம் மான்செஸ்டர் ஓல்வி ட்ராஃப்போர்டு மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. நடப்பு தொடரில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்து தடுமாறி வரும் கப்தில் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரை தொடர்ந்து நிகோல்ஸ் 28 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சில், ஜேம்ஸ் நீஷம் 12 ரன்னிலும், கிராண்ட்ஹோம் 16 ரன்னிலும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். 46.1 ஓவர்கள் வீசப்பட்டிருந்த நிலையில், மழை குறுக்கீடு காரணமாக ஆட்டம் தடைபட்டது. அப்போது நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் எடுத்திருந்தது.

மழையின் தாக்கம் அதிகரித்ததால், 23 பந்துகள் மீதம் இருந்த நிலையில் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மழையால் நிறுத்தப்பட்ட ஆட்டம் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version