உலக கோப்பை வெற்றியை தீர்மானித்த பவுண்டரி விதியை மாற்ற ஐசிசி ஆலோசனை

உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் சர்ச்சையை ஏற்படுத்திய பவுண்டரி விதியை மாற்றுவது தொடர்பாக ஐசிசி ஆலோசிக்க உள்ளது.

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதிய உலகக் கோப்பை இறுதிப்போட்டி சூப்பர் ஓவர் வரை சென்று டிரா ஆனது. இறுதியில், அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற முறையில் இங்கிலாந்துக்கு உலகக் கோப்பை வழங்கப்பட்டது. ஐசிசி-யின் இந்த விதி கடும் விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில், விதியில் மாற்றம் செய்ய வேண்டும் என பலரும் வலியுறுத்தினர்.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு அனில் கும்ப்ளே தலைமையில் ஐசிசி கிரிக்கெட் கமிட்டியின் கூட்டம் நடைபெறுகிறது. இதில், பவுண்டரி விதியை மாற்றுவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

Exit mobile version