டிசம்பர் 31-ம் தேதிக்குள் நிலுவைத் தொகையான 160 கோடி ரூபாயை செலுத்தாவிட்டால், உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு வழங்கப்படாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
2016-ம் ஆண்டு, டி20 உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெற்றன. அந்த போட்டிகளை ஒளிபரப்ப இந்திய அரசாங்கம் வரிச்சலுகை வழங்கவில்லை. இதனால் போட்டியை ஒளிபரப்பிய ஸ்டார் தொலைக்காட்சி நிறுவனம், வரிகளை கழித்துக்கொண்டு, மீதித்தொகையை ஐசிசியிடம் வழங்கியது.
இந்நிலையில் 160 கோடி ரூபாய் நிலுவைத்தொகையை இந்திய கிரிக்கெட் வாரியம் செலுத்த வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கட்டளையிடப்பட்டுள்ளது. டிசம்பர் 31-ம் தேதிக்குள் நிலுவைத் தொகையை செலுத்தாவிட்டால், 2 ஆயிரத்து 21 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2 ஆயிரத்து 23 ஆம் ஆண்டு உலகக் கோப்பை ஆகிய முக்கியமான போட்டிகளை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு வழங்கப்படாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.