கர்ப்பிணி பெண்ணை தீ வைத்து கொளுத்திய கணவர் !

தமிழக கேரள எல்லை பகுதியான பாறசாலை பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் அஜய் பிரகாஷ் என்பவரை, அதே பகுதியை சேர்ந்த அருணிமா என்ற பெண் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் 7 மாத கர்ப்பிணியான அருணிமாவிடம் அவரது மாமியார் லதா வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் கணவர் அஜய் பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அருணிமாவை தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதனையடுத்து அருணிமாவை மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தீ காயத்தால், அருணிமா வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த நிலையில் அருணிமா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தலைமறைவாக உள்ள கணவர் அஜர் பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் தேடி வருகின்றனர்.

YouTube video player

Exit mobile version