இந்தோனேஷிய பெண்ணை திருமணம் செய்த மதபோதகர் !! முகநூலில் மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்தது !

கன்னியாகுமரி மாவட்டம் பருத்திவிளையை சேர்ந்த 62 வயது மதபோதகர் கிறிஸ்டோபர். தாயாருடன் குடும்ப வீட்டில் வசித்து வந்தபடி, வீடு வீடாகச் சென்று மதபோதனையில் ஈடுபட்ட நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக அவரது தாயார் இறந்துவிட, தனிமையில் இருந்த கிறிஸ்டோபருக்கு முகநூல் மூலமாக மதபோதனை செய்தபோது இந்தோனேசியாவை சேர்ந்த திபோரா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளைடைவில் பழக்கம் காதலாக, கடந்த டிசம்பர் மாதம் 21ஆம் தேதி திபோராவை நாகர்கோவில் அழைத்து வந்து தேவாலயம் ஒன்றில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

வயது கடந்த இந்த திருமணத்துக்கு சகோதரர்களும், உறவினர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்த நிலையில்தான், ஜனவரி 24ஆம் தேதி இரவு மனைவிக்கு உணவு வாங்க வெளியே சென்ற நிலையில் கிறிஸ்டோபரை வீட்டிற்குள் விடாமல் உறவினர்கள் கதவை பூட்டிய சம்பவம் அரங்கேறியது.

கிறிஸ்டோபரின் புகாரின் பேரில் அங்கு வந்த போலீசாரிடம் குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இருதரப்பிடமும் பேசி மறுநாள் காவல்நிலையத்துக்கு ஆஜராக வருமாறு கூறி சமாதானம் செய்து வைத்ததோடு பாதுகாப்புக்காக சில காவலர்களையும் அங்கு நிறுத்தி விட்டு சென்றனர்.

62-வயதில் இந்தோனேசியா முகநூல் காதலியை திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்த மத போதகரை நள்ளிரவில் வெளியே தள்ளி இந்தோனேசியா இளம்பெண்ணை அறையில் பூட்டி சிறை வைத்த குடும்பத்தினரால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version