ஜெய்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹாப் நிறுவனம், Hop OXO என்ற புதிய மின்சார பைக்கை அறிமுகம் செய்துள்ளது.
OXO மற்றும் OXO-X ஆகிய இரு ரகங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த பைக், 80 சதவீதம் சார்ஜ் செய்தால் 150 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 ஆண்டுகள் பேட்டரி வாரண்டியுடன் வரும் இந்த பைக்கின் ஆரம்ப விலை 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 100 விற்பனையகங்கள் மூலம் அல்லது ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வாங்கிக்கொள்ளலாம் என Hop நிறுவனம் தெரிவித்துள்ளது.