சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஹசிம் அம்லா அறிவிப்பு

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ஹசிம் அம்லா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ஹசிம் அம்லா அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது அறிமுகமான ஹசிம் அம்லா இதுவரை 124 டெஸ் போட்டிகளில் பங்கேற்று 9 ஆயிரத்து 282 ரன்கள் குவித்துள்ளார்.

அதேபோல 181 ஒரு நாள் போட்டியில் விளையாடி 8 ஆயிரத்து 113 ரன்களும் 44 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி ஆயிரத்து 277 ரன்களும் குவித்துள்ளார். சர்வதேச அளவில் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்த ஹசிம் அம்லா கடைசியாக கடந்த ஜூன் மாதம் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாடினார்.

36 வயதான அம்லா சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றாலும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version