விமானத்தில், உடையில் மறைத்து ரூ.3.71 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல்

துபாயில் இருந்து மதுரை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பவருக்கு சொந்தமான ஜவுளி பொருட்கள் இருந்த பையை சோதனையிட்டபோது, உடையில் தங்கம் கலக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து 3 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பிலான 116 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் பிடிபட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version