அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பிள்ளை நகரில் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு
ஆதரவாக முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பழனி உள்ளிட்டோர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அதிமுக செயல்படுத்திய திட்டங்களை எடுத்துக்கூறியும், திமுக ஆட்சியில் சொத்து வரி, மின் கட்டணம், பால் விலையை உயர்த்தியதை சுட்டிக்காட்டியும் வாக்கு சேகரித்தனர். அப்போது கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன், காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Exit mobile version