கொலை வழக்கில் முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவருக்கு இரட்டை ஆயுள்

நிலத்தகராறில் வெடிகுண்டு வீசி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவருக்கு சிறப்பு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

மன்னார்குடி உள்ளிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி என்பவருக்கும், பரவக்கோட்டை பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்ததாக தெரிகிறது.

கடந்த 2005ஆம் ஆண்டு, சமசர பேச்சுக்கு அழைத்த முன்னாள் திமுக ஊராட்சி மன்றத் தலைவரான பொய்யாமொழியை, தமிழ்ச்செல்வன் ஆபாசமாக திட்டி அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த பொய்யாமொழி, தமிழ்ச்செல்வன் மீது நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை செய்தனர். சம்பவம் தொடர்பாக பொய்யாமொழி, ஆசைத்தம்பி உள்பட 9 பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில், வழக்கு மீதான விசாரணை பூந்தமல்லி அருகே கரையான்சாவடியில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

பொய்யாமொழி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு இரட்டை ஆயும் தண்டனை வழங்கிய சிறப்பு நீதிமன்றம், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது.

Exit mobile version