லிபியாவில் விமானம் ஒன்று நடுவானலில் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், அவசர அவரசமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
லிபியாவில் அஃப்ரிகுயா ஆர் லயன்ஸின் A320 என்ற விமானம் வானில் பறந்து கொண்டிருந்த போது, தீடீரென தாக்குதலுக்கு உள்ளானது. இதில், விமானத்திற்கு லேசான சேதம் ஏற்பட்டது. இதனால் அந்த விமானம் உடனடியாக திரிபோலி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனால் பெரும் உயிர் இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக அந்த விமான நிறுவனம் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளது. மேலும், விமானத்திற்குள் இருந்த 3 அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், கூறப்பட்டுள்ளது. மேலும், விமானத்தில் பயணித்தவர்கள் குறித்த எந்த தகவலும் வெளியாகாத நிலையில், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த நபரோ அமைப்பைபோ பொருப்பேற்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.