புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகே, ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி மழை நீரில் சிக்கி மருத்துவர் உயிரிழந்ததை அடுத்து, அப்பாதையை மூட அதிகாரிகள் சம்மதித்துள்ளனர்.
தொடையூரைச் சேர்ந்த மருத்துவர் சத்யா, தனது மாமியார் ஜெயாவுடன் காரில் சென்றுள்ளார். அப்போது ரயில்வே சுரங்கப்பாதையில் அதிக அளவு மழை நீர் தேங்கியிருந்ததை அறியாமல் சென்றதால், கார் நீரில் மூழ்கியது. அப்போது ஜெயா நீச்சல் அடித்து கரைசேர்ந்த நிலையில், மருத்துவர் சத்யா நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, சுரங்கப்பாதையை மேம்பாலமாக மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து ரயில்வே துறை அதிகாரிகள்
மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரயில்வே சுரங்கப்பாதையை மூட அதிகாரிகள் சம்மதித்துள்ளனர்.
Discussion about this post