சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடைபயணமாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, பெட்டிகடையில் இருந்த பெண் ஒருவர் முதல்வருக்கு அன்பாக பழங்களை வழங்கினார். இதனை பெற்றுக் கொண்ட முதலமைச்சர், அதற்கு உரிய தொகையை அந்த பெண்ணிடம் அளித்தார். இதனை திமுகவினர் அவதூறாக சித்தரித்து அவதூறு பரப்பி வந்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, திமுகவினரை போன்று இலவசமாக நாங்கள் எந்தப்பொருளையும் வாங்குவதில்லை என விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் தான் வாங்கிய வாழைப்பழத்திற்கு மட்டுமே தன்னிடம் காசு கொடுத்ததாகவும், ஆனால், இதை திரித்து வெளியிட்டதன் பின்னணியில் திமுகவினர் உள்ளதாகவும் பெண் வியாபாரி விளக்கம் அளித்துள்ளார். முதலமைச்சருக்கு வாழைப்பழத்தை விற்பனை செய்த அந்தப் பெண் நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், எந்த பின்னணியும் தெரியாமல், இந்த விவகாரம் தவறாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.
Discussion about this post