விவசாயத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் விவசாயத்திற்கு இன்று முதல் 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதனால் விவசாயிகள் தங்கள் தேவைக்கு ஏற்ப எப்போது வேண்டுமானாலும் விவசாய மின் மோட்டரை பயன்படுத்தி விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சலாம். விவசாயத்திற்கு 24 மணி நேர மும்முனை மின்சார வழங்கிய தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.