தமிழக அரசின் வேளாண் துறை மீது வேதாரண்யம் விவசாயிகள் குற்றச்சாட்டு

வேதாரண்யம் பகுதிகளில் மானாவாரி நெல் விதைப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு அரசு எந்தவித இடுபொருட்களும் வழங்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்

நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 15 ஆயிரம் ஏக்கரில் மானாவாரி நேரடி சம்பா நெல் விதைப்பில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், வேளாண் துறை மூலம் எந்த வித இடுபொருட்களும் வழங்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதேபோல் கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பையும் நம்பி, ஏமாந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதனால் தமிழக அரசு விவசாயிகளுக்கான நகை கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், மானாவாரி நேரடி சம்பா நெல் விதைப்புக்கு உரிய இடுபொருட்களை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Exit mobile version