தென்னை மரங்களை தாக்கும் கரும்பூஞ்சை நோய் – விவசாயிகள் வேதனை

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே விளைநிலங்களில் உள்ள தென்னை மரங்களை கரும்பூஞ்சை நோய் தாக்கி உள்ளதால் விவசாயிகள் மற்றும் அதனை சார்ந்துள்ள தொழிலாளர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

போச்சம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 15 ஆயிரம் ஏக்கரில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தென்னை மரங்கள் கரும்பூஞ்சை நோய் தாக்குதலுக்கு ஆளாகி ஓலைகள் கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதனால் தென்னை துடைப்பம் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதனால் தென்னை மரங்களை தாக்கி உள்ள கரும்பூஞ்சை நோயை கட்டுபடுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

Exit mobile version