தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் விநியோகமானது அதிகமாகி விட்டது. மதுப்பிரியர்கள் சாராயத்தை விரும்பி குடிப்பதன் பொருட்டு பக்கவிளைவுகளும், உயிராபத்துகளும் ஏற்படுகின்றனர். இந்நிலையை கண்டுகொள்ளாமல் விட்டதால் இன்றைக்கு விழுப்புரம், செங்கல்பட்டு என்று பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்துள்ளனர் மக்கள். தற்போது வரைக்கும் 18 நபர்கள் கள்ளச்சாராயம் உட்கொண்டு பலியாகியுள்ளனர்.
இறந்தவர்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் நேரில் சென்று முதல்வர் பார்வையிடுகிறார். அவர்களுக்கு பத்து லட்சம் இழப்பீடு வழங்குகிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் தருகிறார். இதுவெல்லாம் சரி, ஆனால் கள நிலவரம் என்பது வேறு என்று ஸ்டாலின் எப்போது உணரப்போகிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இன்றைக்கு தமிழகம் முழுவதும் 1558 பேர் கள்ளச்சாராயம் தேடுதல் வேட்டையில் பிடிபட்டுள்ளனர் என்று மார் தட்டுகிறார் டிஜிபி சைலேந்திரபாபு. ஆனால் மக்களின் கேள்வி என்னவோ, இத்தனை நாள் பிடிக்காமல் உயிர்கள் போன பிறகு முனைப்பு காட்டுவது ஏனோ என்றுதான். இதனை முன்கூட்டியே தடுத்திருந்தால் இத்தனை உயிர்கள் பலியாகியிருக்காது என்பதுதான் பலரது கேள்வியாக இருக்கிறது. ஏன் அரசு அலட்சியம் காட்டியது? ஏன் அரசு விரைந்து முடிவுகளை எட்டவில்லை?
காவல்துறையினரும் இந்த கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு உறுதுணையாக இருப்பது பரவலாக தெரிந்த விஷயம்தான். காவல் துறையினர் இப்படி கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு துணைபோவதை, சட்டம் ஒழுங்கு கண்காணிப்பாளர் டிஜிபி சைலேந்திரபாபு ஏன் கண்டிக்காமல் விட்டார்? காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வருக்கு இது தெரியாமல் இருப்பது ஸ்டாலின் எப்படிப்பட்ட பொம்மை முதல்வர் என்பதைக் காட்டுகிறது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Discussion about this post