ஈரோடு மாநகராட்சியில் உள்ள சிறப்பு முகாமில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி திடீரென நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் முழுவதும் 66 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசிக்காக, ஒவ்வொரு நாளும் நள்ளிரவு முதல் விடிய விடிய மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், வீரப்பன் சத்திரம் அரசு பள்ளியில் 300-க்கும் மேற்பட்டோர் அதிகாலை முதலே காத்திருந்தனர். ஆனால், தடுப்பூசிகள் இங்கு செலுத்தபடாது என திடீரென அறிவிக்கப்பட்டதால், வெகுநேரம் காத்திருந்த மக்கள் நள்ளிரவு முதல் விடிய விடிய மக்கள் நீண்ட வரிசைல் ஈடுபட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் பொதுமக்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.