ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கழக வெற்றி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களுக்குமாறு பிரச்சாரம் செய்து வருகிறார். தற்போது பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தேர்தல் பயம் தொற்றி விற்றது. அதனால் அவர் தனது கூட்டணி கட்சிக்கு கூட அவர்களது அமைச்சர்களையும், வாக்காளர்களை அடைத்து வைத்தும் தேர்தல் பணியில் ஈடுபடுகிறார். இது மிகவும் அபத்தமானது என்று எதிர்கட்சித் தலைவர் அவர்கள் பேசினார். மேலும் திமுக ஆட்சிபீடம் ஏற்று 21 மாதங்கள் ஆகிய நிலையில் எந்த நலத் திட்டத்தினையும் மக்களுக்கு சரியாக வழங்கவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும் கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்களுக்கு மின்சார யூனிட்டினை உயர்த்துவதாக சொல்லிவிட்டு மின்சார கட்டணத்தினை உயர்த்தி விட்டார்கள. ஆனால் நமது அதிமுக ஆட்சியில் நெசவாளர்களுக்கு சொன்ன அளவிற்கு மின் யூனிட் வழங்கப்பட்டது. ஆனால் அதிமுக கொண்டு வந்த எந்த நலத்திட்டத்தினையும் இந்த விடியா திமுக ஆட்சி செயல்படுத்தாமல் தவிர்த்து வருகிறது என்று குற்றம் சாட்டினார். எனவே பொதுமக்கள் வெற்றிச் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அருமை சகோதரர் கே.எஸ். தென்னரசினை வெற்றி பெறச் செய்யுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.