இன்று எதிர்கட்சித் தலைவரின் மூன்றாவதுநாள் பிரச்சாரம்!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலினை ஒட்டு அதிமுக சார்பாக கே.எஸ்.தென்னரசு அவர்கள் களமிறங்கியுள்ளார். இவரை ஆதரித்து கழகத்தின் இடைக்காலப் பொதுசெயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இரண்டு நாட்களாக ஈரோட்டில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் தேர்தல் பிரச்சாரத்தினை மேற்கொள்ள உள்ளார். அதன் வழித்தடங்களின் விவரங்கள் பின்வருமாறு உள்ளது.

இன்றைக்கு எதிர்கட்சித் தலைவர் அவர்கள் கருங்கல் பாளையம், பெரியார் நகர் பகுதி ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதற்காக ராஜகோபால் தோட்டம், தேர்முட்டி, மோசிகீரனார் வீதி, வி.வி.சி.ஆர் நகர் மற்றும் இறுதியாக சமாதானம்மாள் சத்திரம் பகுதியில் பிரச்சாரத்தினை முடிக்க உள்ளார். இரண்டு நாட்களாக பொதுமக்களும் கட்சித் தொண்டர்களும் அவருக்கு நல்ல வரவேற்பினை அளித்து வந்தார்கள். அதுபோலவே இன்றைக்கு எதிர்கட்சித் தலைவர் அவர்களுக்கு நல்வரவேற்பு கிடைக்கும் என்று தகவல் கிடைத்துள்ளது.

Exit mobile version