ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலினை முன்னிட்டு அதிமுக வெற்றி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசினை ஆதரித்து எதிர்கட்சித் தலைவர் அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தற்போது ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அவர் பிரச்சாரம் செய்து வருகிறார். மக்கள் எதிர்கட்சித் தலைவர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பினை அளித்து வருகிறார்கள். எங்கும் இரட்டை இலை, எங்கும் அதிமுக கொடி என்று ஈரோடே அதிமுக தொண்டர்கள் வெள்ளத்தில் உள்ளது.
பிரச்சாரத்தில் பேசிய எதிர்கட்சித் தலைவர் அவர்கள், ஈரோடு கிழக்குத் தொகுதியில் இரண்டுமுறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அருமை சகோதரர் கே.எஸ். தென்னரசு அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். திராவிடர் கழக ஆட்சியில் 520 வாக்குறுதிகள் சொல்லப்பட்டது. அதில் 85% நிறைவேற்றியாச்சு என்று ஸ்டாலின் சொல்கிறார். இது எத்தனை பொய் என்று உங்களுக்கே தெரியும். மேலும் நீட் தேர்வு ரத்து செய்யும் இரகசியம் எனக்குத் தெரியும் என்று வாரிசு அமைச்சர் சொன்னார். அது என்ன ரகசியம் என்று மக்களுக்கு இன்னும் சொல்லவில்லை. மாணவர்கள் இறப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 21 மாத இந்த திமுக ஆட்சியில் அதிமுகவின் திட்டங்களை செயல்படுத்தாமல் இருந்ததே திமுகவின் சாதனை என்று குற்றம் சாட்டினார்.