திமுகவை வெளுத்து வாங்கிய எதிர்கட்சித் தலைவர்!

செய்தியாளரின் சந்திப்பின்போது விடியா திமுக அரசினைப் பற்றி சரமாரியான விமர்சங்களைத் தொடுத்தார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி. இந்த 21 மாத ஆட்சிகாலத்தில் திமுக எந்தவொரு நல்ல திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. வேட்பாளரின் முகத்தை காட்டாமல் பணத்தைக் காட்டி வாக்கு சேகரிக்கும் பணியில் திமுகவினர் ஈடுபடுகின்றனர். மேலும் ஒவ்வொரு பூத்திலும் ஆட்களை பிடித்து வைத்துக்கொள்கிறார்கள்.

இந்த தேர்தலை ஒட்டி திமுகவினர் பல விதிமீறல்களில் ஈடுபடுகிறார்கள் அதை ஊடகங்கள் சரியாக காட்சிப்படுத்த தவறுகிறீர்கள். நீங்கள்தான் இதுபோன்ற விஷயங்களை மக்களுக்கு கொண்டு செல்லவேண்டும் என்பதை எனது வேண்டுகோளாக ஊடகங்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் என்றார் எதிர்கட்சித் தலைவர். ஐந்தாண்டுகள் அடிமைசாசனம் எழுதிதானே 1999ல் பாஜக கூட்டணியில் அமைச்சரவையில் அங்கம் வகித்தார்கள். எங்களை அடிமை என்று விமர்சிக்க திமுகவிற்கு அறுகதை கிடையாது. இன்றைக்கு நடக்கக்கூடிய ஒரு பிரச்சனைக்கு கூட திமுக தனது கண்டனத்தை தெரிவித்து உள்ளார்களா? என்றால் இல்லைதான். எதற்குமே வாய்திறக்காதவர்கள் அதிமுகவை குறைசொல்வதற்கு தகுதியற்றவர்கள் என்று எதிர்கட்சித் தலைவர் பேசினார்.

மக்களின் வேதனைகளுக்கு குரல் கொடுக்காத கட்சிகள் அடிமை கட்சிகள்தானே. திமுகவின் கூட்டணியில் இருக்கும் ஒவ்வொரு கட்சியினருமே அப்படிதான் உள்ளார்கள். திமுக பதவியேற்றதும் முதல் கையெழுத்து நீட் ரத்து என்று சொன்னார்கள். ஒருமுறையாவது மத்திய அரசுக்கு எதிராக குரல்கொடுத்து நீட் ரத்தைப் பற்றி பேசினார்களா? என்றால் இல்லை. பெட்ரோல் விலை குறைக்கவில்லை இதுபோல பல வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. கேட்டால் 85% வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று பச்சைப் பொய் சொல்கிறது என்று எதிர்கட்சித் தலைவர் குற்றம் சாட்டினார்.

Exit mobile version