12 மணி நேர வேலை .. திமுக எனும் உருட்டு மாடல்! அன்று ஒரு உருட்டு! இன்று ஒரு உருட்டு!

mk stalin

1986ல் திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி 6 மணி நேரமாக தொழிலாளர்களின் வேலை நேரத்தை நிர்ணயிப்போம் என்று முழங்கினார். அதேபோல 2020ல் பன்னிரெண்டு வேலை நேரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார் அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதல்வர் ஸ்டாலின். ஆனால் இன்றைக்குப் பார்த்தால் பன்னிரெண்டு மணி நேர வேலை மசோதாவை சட்டசபையில் கொண்டு வந்து தீர்மானமும் நிறைவேற்றி விட்டார்கள். இது தொழிலாளர்களின் மனநிலையினை மிகவும் பாதித்துள்ளது. மேலும் தொழிலாளர்களின் உரிமையையும், உணர்வினையும் இந்த அரசு மதிக்கவில்லை என்று அவர்களது கூட்டணிக் கட்சித் தலைவர்களே பேசி வருகிறார்கள். அதிமுக உட்பட திமுகவின் கூட்டணியில் இருக்கும் விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை நேற்றைய தினம் வெளிநடப்பும் செய்துள்ளனர்.

திமுகவின் உண்மை முகம் படிப்படியாக வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது. பாசிச சக்திபோல திமுக செயல்படுகிறது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எந்த வகையான தீர்மானங்களை முன்மொழிவதற்கு முன்பு ஆலோசனைக் குழுவிடமும் சம்பந்தப்பட்ட துறைரீதியானவர்களிடமும் ஆலோசனை நடத்தப்பட்ட பிறகே தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்கிற மரபை திமுக மீறிவிட்டது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Exit mobile version