ஈரோட்டில் எகிப்த் வெங்காயம் குறைவான விலைக்கு விற்பனை

எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம், ஈரோடு தினசரி சந்தைக்கு கொண்டு வரப்பட்டு, குறைவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. 

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் வெங்காய சாகுபடி மிகவும் பாதிக்கப்பட்டது.இதனால் வெங்காயத்தின் வரத்து வெகுவாகக் குறைந்து போனது. இந்த நிலையில், தமிழக அரசின் சீரிய நடவடிக்கையால், எகிப்திலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு, மாவட்டந்தோறும் விநியோகிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஈரோடு நேதாஜி தினசரி சந்தையில் வெங்காயத்தின் விலை கட்டுப்படுத்தப்பட்டு, பெரிய வெங்காயம் கிலோ ஒன்று 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால், பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். 

Exit mobile version