பாலகோட் தாக்குதலின்போது ரஃபேல் விமானங்கள் இருந்திருந்தால் நிலைமை வேறு விதமாக அமைந்திருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, பாலகோட் தாக்குதலில் ரஃபேல் விமானம் நம்மிடம் இல்லையே என்று தேசமே உணர்ந்ததாக குறிப்பிட்டார். ரஃபேல் விமானம் இருந்திருந்தால், தாக்குதலின் முடிவு வேறுவிதமாக அமைந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் தன்னை தாராளமாக விமர்சிக்கலாம் என்று கூறிய அவர், ஆனால் அவர்களது மோடிக்கு எதிரான கிளர்ச்சி மசூத் அசார், ஹபீஸ் சயீத் போன்ற பயங்கரவாதிகளுக்கு உதவுவதாக ஆகிவிடக்கூடாது என்று வலியுறுத்தினார். அரசியல் லாபத்திற்கான நாட்டை பலவீனப்படுத்த வேண்டாம் என்றும் எதிர்க்கட்சிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.