அம்மா உணவகத்தில் நிலவும் பரபரப்பு வீடியோ…

கண்ணதாசன் நகர் அம்மா உணவகத்தில் புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் படத்தை அகற்றிவிட்டு ஸ்டாலின் படத்தை வைத்த மாநகராட்சி அதிகரிகளின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

சென்னை பெரம்பூர் பகுதி கண்ணதாசன் நகரில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் இருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றிவிட்டு ஸ்டாலின் புகைப்படத்தை வைத்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த அப்பகுதி மக்களும், அதிமுக நிர்வாகிகளும் அம்மா உணவகத்தில் இருந்து ஜெயலலிதாவின் படத்தை அகற்றுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை அம்மா உணவகத்தில் மீண்டும் வைக்க வேண்டும் என வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

Exit mobile version