கர்நாடகாவில் நடைபெறும் குமாரசாமி தலைமையிலான அரசை கவிழ்க்க முயற்சிக்க கூடாது என சித்தராமையாவிற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவுரை வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
கர்நாடகாவில் பாஜக ஆட்சியைப் பிடிக்கக் கூடாது என்னும் நோக்கில் குறைவான சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துள்ள மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியும், காங்கிரசும் புதிய கூட்டணியை உருவாக்கின. இதன்மூலம் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரான குமாரசாமி முதலமைச்சர் பதவியேற்றார். இருப்பினும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் இருகட்சிகளுக்கும் இடையில் தொகுதிப் பங்கீடுகளில் முரண்பாடு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே அண்மையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அளித்த தொந்தரவால், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என குமாரசாமி தெரிவித்தார். இந்நிலையில் குமாரசாமி தலைமையிலான அரசை கவிழ்க்க முயற்சிக்கக்கூடாது என சித்தராமையாவிற்கு ராகுல்காந்தி அறிவுரை வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.