இருங்குன்றம்பள்ளி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பார்த்தசாரதி, பத்மநாபன் மற்றும் ஆனந்தி ஆகியோர் வசித்து வந்தனர். கடந்த 1966 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் இடமில்லாத ஆதிதிராவிடர்களுக்கு நிலம் வழங்கும் திட்டத்தில், சுமார் 2 புள்ளி 22 ஏக்கர் அளவில் இவர்களுக்கு இடம் வழங்கியது. இந்நிலையில் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய திமுக அவைத்தலைவரும், ஆலப்பாக்கம் ஊராட்சியின் முன்னாள் தலைவருமான திருமலை என்பவர், போலி பட்டா மூலம் இந்த நிலத்தை அபகரிக்க முயற்சித்து உள்ளார் என்றும், தொடர்ந்து இந்த இடத்தை தனது பெயரில் எழுதித் தருமாறும் கொலை மிரட்டல் விடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜேசிபி இயந்திரங்களுடன் வந்த திமுக பிரமுகர் திருமலை, மூன்று வீடுகளையும் இடித்து அகற்றியுள்ளார். இது தொடர்பாக பாதிக்கபட்ட நபர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரவோடு இரவாக மூன்று வீடுகளை இடித்து தள்ளிய திமுக பிரமுகர் !
-
By Web team
- Categories: தமிழ்நாடு
- Tags: ChengalpattuDemolishedDMK leaderovernightthree houses
Related Content
ஏப்ரல்1 முதல்..சுங்க சாவடிகளில் 5 முதல் 15 விழுக்காடு வரை கட்டண உயர்வு!
By
Web team
March 10, 2023
செங்கல்பட்டு.. ஸ்மார்ட் டிவியை ஸ்மார்ட்டாக திருடிய இளைஞர்!
By
Web team
March 3, 2023
பாதியிலேயே நின்று போன திருமண வரவேற்பு நிகழ்ச்சி !
By
Web team
February 15, 2023
செங்கல்பட்டு - தனியார் டேங்கர் லாரிகளால் சாலையில் விடப்படும் கழிவு நீர்..!
By
Web team
February 12, 2023
முதல ஸ்கூல் கட்டுங்க..அப்பறம் ஆபீஸ் கட்டுவீங்க!
By
Web team
February 9, 2023