திண்டுக்கல் மாவட்டம் பழையப்பட்டியைச் சேர்ந்த கார்த்திகா ஜோதி என்பவர் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் அக்கல்லூரியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கல்லூரி விடுதியில் கார்த்திகா ஜோதியுடன் தங்கிருந்த சக தோழிகள் அவரை கிண்டல் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. அவர் முன்னதாக கல்லூரி நிர்வாகத்திடம் இதனைப் பற்றி புகார் செய்திருந்தார்.
இதனால் அவர் அறையில் இருந்த நான்கு மாணவிகளையும் வெவ்வேறு அறைக்கு மாற்றியுள்ளனர். இருப்பினும் கார்த்திகா ஜோதியை கேலி செய்வதை அந்த மாணவிகள் தொடர்ந்து செய்து வந்தார்கள். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கார்த்திகா ஜோதி கல்லூரியின் மூன்றாவது மாடியில் இருந்து தற்கொலை செய்யும் பொருட்டு குதித்துள்ளார். அவர் பிப்ரவரி 21ஆம் தேதி மாடியில் இருந்து குதித்துள்ளார். 6 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக போலிசார் விசாரனை செய்து வருகிறார்கள். திண்டுக்கலை சேர்ந்த மகளிர் அமைப்பினர் இது குறித்து விசாரனை விரைவில் நடத்த வேண்டும் என்று திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்றைக்கு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பிறகு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மாணவியின் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.