கோபா அமெரிக்கா கால்பந்து சாம்பியன் பட்டத்தை வென்றது பிரேசில் அணி

பிரேசிலில் நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பிரேசில் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

பிரேசிலில் உள்ள மரக்கானாவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிரேசில் அணி பெரு அணியை எதிர்கொண்டது . இதில் 3-1 என்ற கோல் கணக்கில் பெரு அணியை பிரேசில் அணி வீழ்த்தியது. கடந்த 2007 ஆம் ஆண்டிற்கு பிறகு பிரேசில் தற்போது கோபா அமேரிக்கா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

பிரேசில் அணியில் எவெர்டன் சோரேஸ், காப்ரியல் ஜீசஸ், ரிச்சர்லிசன் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். பெரு அணியில் பாலோ கரீரோ மட்டுமே ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் 3-1 என்ற கணக்கில் பிரேசில் அணி கோபா அமெரிக்க சாம்பியன் பட்டத்தை வென்றது.

Exit mobile version