தேசிய அளவிலான சிலம்பம் போட்டி: தமிழ்நாடு அணி சாம்பியன்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், நடைபெற்ற தேசிய சிலம்பம் போட்டிகளில், தமிழ்நாடு அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது.

அகில இந்திய சிலம்பம் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு சிலம்பக் கழகம் சார்பில் 15-வது தேசிய சிலம்பம் போட்டிகள் நடைபெற்றன. 19 மாநிலங்களை சேர்ந்த 900க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். மினி சப் ஜூனியர், சப்ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் என நான்கு பிரிவுகளில் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன.

Exit mobile version