உலக பாரா பேட்மின்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் மானசி ஜோஷி

மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில், பட்டம் வென்று சாதனை நிகழ்த்தியுள்ளார் இந்தியாவின் மானசி ஜோஷி.

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கம் வென்று அசத்தினார். அவருக்கு இந்தியா முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்தன.

இதனிடையே, மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற பாரா உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரும் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில், பருல் பார்மரை எதிர்கொண்ட இந்தியாவின் மானசி ஜோஷி, 21-12, 21-7 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்த தொடரில் அவர் பெற்ற முதல் தங்கப்பதக்கம் இதுவாகும்.

தங்கம் வென்ற அசத்திய மானசி ஜோஷிக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Exit mobile version