கோபா அமெரிக்கா கால்பந்து; இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பிரேசில் அணி

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில், அர்ஜெண்டினா அணியை வீழ்த்தி பிரேசில் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

பிரேசிலில் நடைபெற்ற இந்த போட்டியில், 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது பிரேசில் அணி. பிரேசில் அணியின் வீரர்களான கேப்ரியல் ஜீசஸ் மற்றும் ராபர்டோ ஃபெர்மினோ ஆகியோர் தலா ஒரு கோலை அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள பிரேசில் அணி, சிலி மற்றும் பெரு அணிகளுக்கிடையேயான போட்டியில் வெற்றி பெரும் அணியுடன் இறுதிப் போட்டியில் விளையாடும்.

Exit mobile version