ஊழல் பசையில் கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் இணைந்துள்ளது: பிரதமர் மோடி

ஊழல் என்கிற பசையில் அடித்தளம் அமைத்து, காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

அருணாச்சலப் பிரதேசத்தின் ஆலோவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், முந்தைய ஆட்சியாளர்கள் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியை புறக்கணித்தனர் என்று கண்டனம் தெரிவித்தார். பா.ஜ.க வின் முயற்சியால் வடகிழக்கு மாநிலங்களில் வளர்ச்சி என்பது சாத்தியமாகியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

ஊழல் என்கிற பசையே காங்கிரசை அதன் கூட்டணிக் கட்சிகளுடன் இணைத்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

Exit mobile version