முஸ்லிம்களுக்குத் தடுப்பு முகாம்கள் எனக் கூறி காங்கிரஸ் பொய் பிரசாரம் செய்கிறது: பிரதமர் மோடி

முஸ்லிம்களுக்குத் தடுப்பு முகாம்கள் எனக் கூறி நகர்ப்புற நக்சல்களும், காங்கிரஸ் கட்சியினரும் மக்களிடையே பொய்யான பிரச்சாரம் செய்து வருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

டெல்லியில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் ராம்லீலா மைதானத்தில் பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நகர்ப்புற நக்சல்களும், காங்கிரஸ் கட்சியினரும் முஸ்லிம்களுக்குத் தடுப்பு முகாம்கள் எனப் பொய்கூறி அவர்களைப் போராட்டத்துக்குத் தூண்டிவிடுவதாகக் குற்றஞ்சாட்டினார். வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் சிறப்பியல்பு எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தால் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதால், நாடாளுமன்றத்தின் தீர்மானத்துக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் எனப் போராட்டக்காரர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். பாஜக அரசின் ஐந்தாண்டுக்கால ஆட்சியில் ஏழை மக்களுக்காக ஒன்றரைக்கோடி வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Exit mobile version