மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாளை ஒட்டி அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிடுகிறார்.
மறைந்த முதலமைச்சரும் அ.தி.மு.க.வின் நிறுவனருமான பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, காலை 11 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் எம்.ஜி.ஆரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தவுள்ளார். இதனை தொடர்ந்து எம்.ஜி.ஆரின் திருவுருவம் பொறித்த நாணயத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிடுகிறார்.
இந்த விழாவில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
Discussion about this post