பிரபல நாடக ஆசிரியரும், நடிகருமான கிரேஸி மோகன் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார். அவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
கிரேஸி மோகன் மறைவிற்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துள்ளார். இதேபோல், உடல் நலக் குறைவால் உயிரிழந்த கிரேசி மோகனின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கிரேசி மோகனின் மறைவு தமிழ் நாடக துறைக்கும், திரைத்துறைக்கும் பேரிழப்பாகும் என்றும், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் திரையுலக, நாடகத்துறை நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post